.

Pages

Monday, April 20, 2015

அதிரையில் சீமான் கட்சி !

தமிழகத்தின் அரசியல் காட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது நாம் தமிழர் கட்சி. இதன் தலைவராக சீமான் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கட்சியின் மாநாடு எதிர்வரும் [ 24-05-2015 ] அன்று திருச்சியில் மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வாரீர் என அழைப்பு விடுத்து அதிரை செக்கடி பள்ளி அருகே உள்ள சுவற்றில் இதற்கான அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.

4 comments:

  1. செக்கடி பள்ளிவாசலுக்கு சொந்தமான சுவற்றில் அரசியல் விளம்பரம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்க தக்கது. இது தவறான முன் உதாரணம், இதைபோல பிற கட்சிகளும் தொடர்ந்து விளம்பரம் செய்யக்கூடும்.

    ReplyDelete
  2. இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். நமதூரில் பல அரசியல் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி பள்ளிவாசலுக்கு சொந்தமான பகுதியில் ஒரு கட்சியின் விளம்பரம் எழுதப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. உடனடியாக செக்கடி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எழுதியவர்களை கூப்பிட்டு அழிக்க சொல்லவேண்டும். அப்படி அவர்கள் நிர்வாக அனுமதியில்லாமல் எழுதி இருந்தால பள்ளி நிர்வாகம் உடனடியாக அழிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

    ReplyDelete
  3. செக்கடி பள்ளி சுவற்றில் கட்சி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .இதை பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்று வியப்பாக உள்ளது என்றும் . இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் பல கட்சிகள் விளம்பரம் செய்ய வந்து விடுவார்கள் ஆகையால் பள்ளி நிர்வாகம் பள்ளிவாசலின் புனிதத்தை கருத்தில் கொண்டு இந்த விளம்பரத்தை அகற்ற முன் வர வேண்டும்

    ReplyDelete
  4. மேலே மூவர் கூறிய கருத்தை நானும் அதை வழிமொழிகிறேன்...!!

    செக்கடிப்பள்ளி நிர்வாகம் துரித நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.