.

Pages

Wednesday, April 29, 2015

ஒரு மாதத்திற்குள் 24 மணி நேர நிரந்தர சேவை: பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாளை [ 30-04-2015 ] சாலை மறியல் போராட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன் தலைமையில் இன்று [ 29-04-2015 ] காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

பேச்சுவார்த்தையில் அதிரை பொதுமக்கள் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களிடம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்தனர். இவற்றை கவனமாக கேட்டுக்கொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அரங்க நாதன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அவர்கள் அளித்த உறுதியை அடுத்து அதிரை பொதுமக்களின் நியாமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் கலையரசன், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
 
 
 

8 comments:

  1. அதிரை நியூசின் செய்திகளை 2,3 நாட்களாக கவனித்து வருகிறேன், பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் அரசு மருத்துவமனை விவகாரத்தில், பஸ் மறியல் என முடிவு எடுத்த நாளிலிருந்து, காவல் நிலைய அனுமதி, பொதுமக்கள் அதிகமாக ஒரு சேர கூடும் இடங்களில் அறிவுப்பு, ஆட்டோ மூலம் ஊரின் எல்லா பகுதிக்கும் தெரிவித்தது, நேற்று முக்கியஸ்தர்களை கூட்டி வட்டாட்சியரிடம் பேசுவது சம்பந்தமாக ஆலோசனை, இன்று மக்கள் புறப்பட்டு பேச்சு வார்த்தை முடிந்து ஓரளவு வெற்றியுடன் திரும்பிக்கொண்டிருப்பது வரை ஒரு நேர்முக வருணனை போல தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது.

    பேரூராட்சி தலைவரின் பங்கு இந்த விஷயத்தில் பெரிய அளவு என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. அதே நேரத்தில், அதிரை நியுஸ், பிற குழுக்கள், இயக்கங்களின் ஓரளவு உழைப்பும் இதில் உள்ளது. எனவே சேர்மன் அவர்களையும், இதற்காக அவருடன் இணைந்து பாடு பட்டவர்களையும் நமதூர் மக்கள் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.

    இன்றைய நிகழ்வில் நமக்கு தெரிய வந்திருப்பது "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதே.

    ReplyDelete
  2. அரசு மருத்துவமணைக்குச்செல்வதை கவுரவக்குரைச்சலாக(prestige problem) நினைக்காமல். இனிமேல் முறையாக பயன்ப்படுத்தவேண்டும்.

    ReplyDelete
  3. Yes, we should utilise the opportunity .Then only we can get more facilities thru government officials. .....

    ReplyDelete
  4. நல்ல முடிவு எடுக்க ஒத்துழைத்த உள்ளங்களுக்கு நன்றி! இரவில் 1 டாக்டர் என்பதை விட
    2 டாக்டர் இருப்பது நலம், தமிழகத்தில் பல இடங்களில் 24 மணி நேர சேவை என்று தான் பெயர் ஆனால் இரவு நேரத்தில் டாக்டர் இருப்பதில்லை அவர் இருக்கும் இடத்தில் அவரது உதவியாளரே மருத்துவர் அல்லது " டாக்டர் இல்லீங்கோ " கூலாக அங்குள்ளவர்களே சொல்லிவிடுவதால் மீண்டும் பா. கோட்டை அல்லது தஞ்சாவூர் தான் போகவேண்டிய நிலைமை ஏற்படும். இந்த நிலைமை ஏற்பட்டால் மீண்டும் போராட்டம் - சமாதானம் என்று கால - நேரம் தான் வீணாக போகும், குறை சொல்லவில்லை தொலை நோக்கு பார்வையோடு பாருங்கள் புரியும்.

    அரசு பொது மருத்துவமனையில், இரவு நேர மருத்துவர் உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதாக பொது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆம்புலனஸ் சர்வீஸ் பற்றி ஒன்னேயும் காணோம்... இனி அதற்க்கு ஒரு போராட்டம் எப்போ!

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நல்ல முன்னுதாரணத்தை வரும் காலங்களிலும் கடைபிடிக்கவும், வெற்றியடையவும் அல்லாஹ் அருள்புரிவானாக!

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    ஒப்புதல் கிடைத்து விட்டது, இனி அரசு பார்மாலிடீஸ், ஜி.ஓ., இப்படி பல படிகளை கடந்து நமது வெற்றிக்கு ஒரு பூ பூக்கப் போகுது.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.