அதிரை மேலத்தெருவுக்கு உட்பட்ட மகிழங்கோட்டை சாலை சானாவயல் சண்முகம் டீக்கடைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்று அந்தரத்தில் உடைந்த நிலையில் அனாதையாய் மின்விளக்கு [ டியூப் லைட் ] கவனிப்பாரற்று தொங்கிக் கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் அதிக புழக்கத்தில் உள்ள இந்தப் பகுதியில் எந்நேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதை இப்பகுதி மக்கள் பயத்துடனே பார்த்தவாறு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி இப்பகுதி வாசிகளிடம் கேட்டபோது இது உடைந்து தொங்கி பத்து தினங்களுக்கு மேலாகிறது என்றும், இந்த மின்விளக்கு கம்பமும் வெடிப்பு ஏற்ப்பட்டு ஆபத்தான நிலையில் நிற்பதாகவும் இதை யாரும் இதுவரை வந்து சரி செய்ய வில்லை என்றும் அசம்பாவிதம் ஏதும் நடக்குமுன் சரி செய்தால் பாதுகாப்பாக இப்பகுதியை கடந்து செல்லலாம் என்கின்றனர்.
இந்த பகுதிகளின் மின் விளக்குகளை பராமரிப்பு செய்து வரும் பேரூராட்சி நிர்வாகம் உடைந்த மின்விளக்கை மாற்றித்தரவும், வெடிப்பு ஏற்பட்டுள்ள மின்கம்பத்தை அதிரை மின்சார வாரியம் உடனடியாக சீரமைத்து தரவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.