தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொருளாளராக பொறுப்பு வகிப்பவர் லெ.மு.செ அஹமது ஹாஜா, இவர் கடந்த [ 20-04-2015 ] அன்று இரவு பட்டுக்கோட்டையில் இருந்து ஆட்டோ வாகனத்தில் ஊர் திரும்பிகொண்டிருந்தார். இவருடன் தமுமுக நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச் செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் நடுத்தெருவை சேர்ந்த ராஜிக் ( வயது 32 ) ஆகியோர் வாகனத்தில் இருந்தனர். வாகனம் கரிக்காடு அருகே வந்தபோது 15 பேர்கள் கொண்ட கும்பல் ஆட்டோ வாகனத்தை வழிமறித்து தாக்கிவிட்டு வாகனத்தில் இருந்த ராஜிக்கை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். கும்பல் தாக்கியதில் அஹமது ஹாஜாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த தமுமுக மாவட்ட நிர்வாகிகள் - அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கிளை நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து, சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் சம்பந்தபட்டோர் மீது துரித நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொண்ட தமுமுக நிர்வாகிகள் அனைவருக்கும், கும்பலால் கடத்தப்பட்ட ராஜிக்கை உடனடியாக மீட்டு தந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் தனது நன்றியை அன்புடன் கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.