.

Pages

Wednesday, April 29, 2015

அதிரை சேர்மனின் நன்றி அறிவிப்பு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு அதிரை பேரூந்து நிலைய பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நிகழ்ச்சியொன்றில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டார். இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

9 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    துடிப்பான செயலை செய்துவிட்டு, துடிப்புடன் நன்றி சொல்லும் அதிரை சேர்மன் தம்பி அஸ்லம் அவர்களை வாழ்த்துகிறேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்
    மிக அருமையான செயல் அதிரை சேர்மன் அஸ்லம் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நன்றி! நன்றி!! அதிரை சேர்மன் தம்பி அஸ்லம், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  4. நன்றி! நன்றி!! அதிரை சேர்மன் தம்பி அஸ்லம், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. Thanks to everyone who spported by media and participated

    ReplyDelete
  6. மிகபெரிய சதனை அல்ஹம்துல்லாஹ் 45வருடம் நடக்காத சம்பவம் இப்போது நடந்துஉள்ளது நன்றி

    ReplyDelete
  7. ஊர் நலன் கருதி இப்படி ஒன்று பட்டால் இன்னும் நமக்குத்தேவையான எத்தனையோ காரியங்களை அரசிடம் கோரிக்கை வைத்து பெறலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமையின் பலத்திற்க்கு உதாரணமாய் கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.