பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கடைத்தெரு என்கே எஸ் சவுன்ட் சர்வீஸ் எதிரே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் மக்கள் சங்கமம் மாநாடு அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினருமாகிய என்.எம் ஷாஜஹான், மக்கள் சங்கமம் மாநாடு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் மக்கள் சங்கமம் மாநாடு நிகழ்ச்சி குறித்து நம்மிடம் கூறுகையில்:-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற இருக்கிறது. இதில் கொடியேற்றம், கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் ஆகியன நடைபெற இருப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர்வரும் 23-04-2015, 24-04-2015 ஆகிய தேதிகளில் அதிரை ஏஜே பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, வினாடி வினா போட்டி உள்ளிட்ட அறிவுத்திறன் போட்டிகளும் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஆகியன நடைபெற இருப்பதாகவும், இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற வேண்டும்' என்று தெரிவித்தார்.
முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் நிஜாமுதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் செயலாளர் சேக் அஜ்மல் நன்றி கூறினார். விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.