.

Pages

Wednesday, April 22, 2015

எஸ்.டி.பி.ஐ கட்சி தண்ணீர் பந்தல் திறப்பு !

முத்துப்பேட்டையில் சோஷியல் டெமக்ராடிக் பார்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பெரிய கடைத் தெருவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். நகர செயலாளர் அப்துல் மாலிக், துணைச் செயலாளர் நெய்னா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்ணீர் பந்தலை மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தீன்முகம்மது, என்.ஆர்.அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நகர தலைவர் சேக் முகைதீன் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்க தண்ணீர் பந்தலை திறந்து வைத்தது நல்லதொரு செயல் அதோடு பொதுமக்களுக்கு, இளநீர், வெள்ளரி, நீர் மோர் ஆகியவற்றை வழங்கினால் ஆஹா! ஓஹேன்னு வாழ்த்தோ வாழ்த்து மழை தான்! முன்னால் இந்நாள் அரசியல்வாதிகள் செய்வதை நீங்க கொஞ்சம் வித்தியாசமா செய்யலாமே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.