செக்கடி குளத்தை நவீன படுத்தும் முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பணிகள் நடைபெற்று வந்தது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெரும் தருவாயில் இருக்கிறது.
இந்நிலையில் இறுதிகட்டமாக குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டயங்ககளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக குளத்தை சுற்றி காணப்படும் நடைமேடை பகுதிகளில் டிசைன் தட்டுக்கள் புதைத்ததை அடுத்து செக்கடி மேடு பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் வாக்கிங் செல்கின்றனர். மக்தப் மதராஸா செல்லும் மாணவர்களும் குதுகலத்துடன் நடந்து செல்கின்றனர். இந்த நடை மேடையில் பெண்களும் வாக்கிங் சென்று வருகின்றனர்.
தமிழக அரசின் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் மழைநீரை பைப் மூலம் குளத்திற்கு போய் சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்படுத்தவும் பைப் புதைக்கப்பட்டது. மேலும் இருபகுதிகளில் சிறிய பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட இருக்கிறது.
சமீபத்தில் செக்கடி குளத்தின் இறுதி வடிவத்தின் மாதிரி புகைப்படங்கள் நமதூர் செக்கடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. உலகளவில் நவீன கட்டமைப்பிலும், தூய்மையிலும், சுகாதாரத்திலும் முன்மாதிரியாக திகழும் சிங்கப்பூரை போல செக்கடி குளத்தை சுற்றி காணப்படும் பகுதி தூய்மையிலும், நவீன கட்டமைப்பிலும் மாற இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர் அப்பகுதியினர்.
கோடை காலம் துவங்கியதை அடுத்து செக்கடி குளத்தின் நீர் மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. நீர் மட்டத்தின் அளவை தக்க வைக்க அப்பகுதியை சுற்றி வசிக்கும் குடியிருப்புதாரர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது குளத்திற்கு செல்லும் வகையில் போர்வெல் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிரை நியூஸில் பதியப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்கள் தண்ணீர் வழங்க முன்வந்துள்ளனர். இவர்களை போல் மற்றவர்களும் பின்பற்றினால் குளத்தில் குறைந்து வரும் நீர்மட்டத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். மேலும் குளத்தின் அருகில் உள்ள செக்கடி பள்ளி, முகைதீன் ஜும்மா பள்ளி ஆகியவற்றின் ஹவூதிலிருந்து வெளியேறும் தண்ணீரையும் குளத்தில் விட ஏற்பாடு செய்யலாம். குளத்தில் ஆங்காங்கே பைப் புதைக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு மற்றும் பள்ளிவாசல்களிலிருந்து வெளியேறும் தண்ணீரை இலகுவாக குளத்திற்கு கொண்டு செல்லலாம் என்கின்றனர் ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.