.

Pages

Wednesday, April 22, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் வாகனம் மோதி விபத்து: ஒருவருக்கு பலத்த காயம்!

பேராவூரணியை சேர்ந்த குடும்பம் ஒன்று இன்று காலை ஈசிஆர் சாலையில் பாண்டிச்சேரியிலிருந்து பேராவூரணியை நோக்கி வாகனத்தில் பயணமானார்கள். வாகனத்தை ஞானபீட்டர் ( வயது 30 ) என்பவர் ஓட்டி வந்தார். வாகனம் அதிரை ஈ.சி.ஆர் சாலை டி.வி.எஸ் ஷோரும் அருகே வந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மேலப்பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சில்லறை வியாபாரி ஜெயசங்கர் ( வயது 32 ) மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்சங்கருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.