.

Pages

Tuesday, April 21, 2015

முத்துப்பேட்டை மதீனா பள்ளிவாசல் இடிப்பு: சட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கும் PFI

முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட பள்ளி வாசலின் இடிப்பு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த சட்டஉதவி ஆலோசனை கூட்டம் பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் நடந்தது. இதில் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் ஷாஜகான், ராஜாமுகம்மது, மற்றும் அதிரை நிஜாம, மாவட்ட தலைவர் பைசல், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயற்குழு ஊறுப்பினர் .அபுபக்கர் சித்திக், மாவட்ட பொது செயலாளர் நெய்னாமுகம்மது, புதுபள்ளி தலைவர் ஹீராபாருக். மதினா பள்ளி நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், கொய்யா சாதிக். தர்கா நிர்வாகிகள் சலீம். நூர்முகமது லெப்பை மற்றும் அனைத்துபள்ளி நிர்வாகிகளும, முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதில் மதினா பள்ளி இடிப்பு சம்பந்தமான வழக்கை பாப்புலர் பிப்ரண்ட் அமைப்பின் வசம் ஒப்படைப்பதாக அனைத்து பள்ளிவாசல் நிர்வாகமும் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.