.

Pages

Sunday, April 19, 2015

அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் !

பாரத ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளர்கள் சந்திப்பு கூட்டம் அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ரிச்வே கார்டன் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மண்டல மேலாளர் சதாசிவம் தலைமை வகித்தார். முதல்நிலை மேலாளர் ( நிர்வாகம் ) முருகவேல், முதல்நிலை மேலாளர் ( ஊரகம் ) செல்வராஜ், முதல்நிலை மேலாளர் ( கடன் பிரிவு ) ஜாய் வர்கீஸ், முதல்நிலை மேலாளர் ( ஊரகம் ) கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மண்டல துணை பொது மேலாளர் சிவக்குமார் கலந்துகொண்டு நடப்பாண்டில் வங்கி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மண்டல எல்லைக்குட்பட்ட 60 க்கும் மேற்பட்ட கிளைகளின் மேலாளர்கள் கலந்துகொண்டனர். இதில் சிறந்த சாதனை படைத்த வங்கிகளுக்கு பாராட்டு தெரிவித்து, சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சாதனை படைத்த வங்கிகளின் மேலாளர்கள் சிறப்பு பரிசுகளை பெற்றுச்சென்றனர். இதில் சிறந்த சாதனை படைத்ததற்காக பாரத ஸ்டேட் வங்கி அதிரை கிளைக்கும் பரிசு வழங்கப்பட்டது. பரிசினை கிளை மேலாளர் அன்பு மொழி பெற்றார். இவரை பலரும் பாராட்டினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரத ஸ்டேட் வங்கி அதிரை கிளையின் சார்பில் மேலாளர் அன்பு மொழி ஏற்றிருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.