இந்நிலையில் அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ( WCC ) சார்பாக கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வருகின்ற மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியை இந்த வருடமும் நடத்தும் முயற்சியில் அதன் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக ஆட்டம் நடைபெறும் மேலத்தெரு மருதநாயகம் திடலை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் முதல் கிரிக்கெட் வீரர்கள் நெட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தினமும் அதிகாலை நேரங்களில் இந்த மைதானத்தில் கூடும் வீரர்கள் கடும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேலத்தெரு மருதநாயகம் மைதானம் களை கட்ட தொடங்கியுள்ளது.
என்னதான் தீவிரமாக விளையாடினாலும்
ReplyDeleteஇடமில்லை என்று வெளிஏற்றி விடுவார்கள்
இந்த கிரிக்கெட் அய்யர் தீவிரவாதிகள்