இது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் அதிரை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று போராட்டம் குறித்து தகவலை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் ஒலிபெருக்கி பொது அறிவிப்பு செய்யப்பட்டன. மேலும் துண்டு பிரசுரங்கள், வால் போஸ்ட்டர் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய கிராம பஞ்சாயத்தார்கள் ஆதரவையும் நேரடியாக சந்தித்து பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை [ 29-04-2015 ] மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் - அரசு மருத்துவர்கள் - அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஊர் பொதுமக்கள் - காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவருக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய அழைப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தை அழைப்பு கடிதம் வந்ததை அடுத்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில், சிறப்பு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருக்கும் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதில் அனைவரின் கருத்துகள் பெறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
என்ன சுறுசுறுப்பான நடவடிக்கைன்னு பாருங்க, ஒரு வாரமா போராட்டமுன்னு அறிவித்து மக்களையெல்லாம் ஓன்று திரட்டும் நேரத்தில் வட்டாச்சியர்க்கு நேற்று தான் தகவல் எட்டியதுபோல் தன் கடிதத்தில் குறிப்பிட்டுரிக்கிறார் அப்படியென்றால் ஒரு மாதத்திற்கு முன்பாக மாவட்ட கலக்டரை பார்த்து மனு கொடுத்தது என்னாச்சு? ஆக அரசு அதிகாரிகளிடையே திட்டமிடுதல் ஒன்றும் இல்லை மாறாக அதிகாரிகளெல்லாம் அரசியல்வாதிக்கு கையலாக இருப்பதை தான் நிரூப்பிக்கிறார்கள், ஆமாங்க; ஒன்றுக்கும் உருப்படாத இலவசத்தை எங்கே விநியோக்கிலாம் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகள் துணை போகிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் அகவிலைப்படி உயர்வு வேண்டும் ஆனால் மக்கள் கோரிக்கை நிராகரிக்க ( அலட்சியம் செய்ய )வேண்டும்! இப்போக்கை அதிகாரிகள் கைவிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteமின்னல் வேகத்தில் லஞ்சம்!
மித வேகத்தில் பரிசீலனை !!
நல்ல ஆரம்பம், நழுவ விடக்கூடாத வாய்ப்பு. சேர்மன் அவர்களின் இந்த அறிவிப்பினாலும்,அவருக்கு முன்னரும் பின்னரும் ஊடகங்களும் வேறு குழுவினரும் எடுத்த முயற்சிகளுக்கு கிடைக்கப்போகும் வெற்றியாக இந்த அழைப்பை ஏற்று, நமதூர் முக்கியஸ்தர்கள், அரசியல்வாதிகள், சங்கங்களின் உறுப்பினர்கள், எல்லா வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த அழைப்பில் பங்கு கொள்ள வேண்டும்.
ReplyDeleteநாளை நடக்கும் பேச்சு வார்த்தையில் அரசு மருத்துவமனை சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் பெற்று வர பாடுபடுவோம்.
சென்று வருக; வென்று வருக
ReplyDeleteநமது கோரிக்கையான '24 மணிநேர மருத்துவமனை' என்பதற்கு பதிலாக 'சுகாதார சீர்கேடு' என பொருளை மாற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கோட்டாட்சியர் என்பதால் மிகுந்த கவனத்துடன் கலந்து கொள்ளவும்.
ReplyDelete