.

Pages

Tuesday, April 28, 2015

ஜித்தா சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு !

மேற்கு மாகாண இந்தியா ஃபெடர்னிடி போரத்தின் தமிழ் பிரிவு தலைவர் மஹ்பூப் ஷரீப் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்

"சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக தொண்டுகள் பலவற்றை இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் பல வருடங்களாக செய்துவருகின்றது.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துவைப்பது, ஆரேக்கியம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஹஜ்ஜூடைய காலங்களில் இந்திய ஹாஜிகளுக்கு உதவுவது, இந்தியாவின் சமகால நிகழ்வுகளின் பிரச்சினைகளையும் தீர்வுகளைவும் பற்றி விவாதிப்பது என பல்வேறு தளங்களில் சேவைகளை செய்துவருகின்றது.

அதனடிப்படையில் மேற்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்ற நன்னோக்கில் சகோதரத்துவ சங்கமம் ஒன்றை இந்தியா ஃபெடர்னிடி ஃபோரம் ஏற்பாடு செயதுள்ளது.

மக்கிடையே ஆரோக்கியம், விளையாட்டு போட்டிகள் குறித்த விழிப்புணர்வு,  குடும்ப உறவு மேம்பாடு குறித்த ஆலோசனை, இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என பல்வேறு தளங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் முகமாக  இந்த சகோதரத்துவ சங்கமம் அமையும்.

மேலும் இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களின் நலன் என அனைத்திலும் தமிழக மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இது நல்லதொரு வாய்;ப்பாகவும் அமையும்.

சகோதரத்துவ சங்கமம் வருகின்ற மே மாதம் 8 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணி முதல் இரவு வரை மக்கா ரோட்டில் உள்ள இம்தியாஸ் இஸ்திராஹா எனும் அரங்கில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும் வருகைதந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்."

இவண்
IFF ஊடகப்பிரிவு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.