.

Pages

Wednesday, April 15, 2015

ஆக்கிரமிப்பு என கூறி முத்துப்பேட்டை மதினா பள்ளிவாசல் இடிப்பால் பரபரப்பு !

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய பரபரப்பளவில் உள்ள பட்டரைக்குளம் தற்பொழுது சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்பால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குளத்தின் கரையோரம் பேரூராட்சியின் துப்புரவு பணியாளர் சுமார் 25 குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்கள். இங்கே இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின்சாரம், தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்பட அனைத்தும் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்ற ஆண்டு பட்டரை குளத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக குளத்தை ஆக்கிரமித்து பேரூராட்சி நிர்வாகம் ரூபாய் 27 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தடுப்பு சுவர் கட்ட பணியை தொடங்கியது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் பணியை நிறுத்தாமல் கட்டி முடித்தது. இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முறைகேடாக குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவரையும், சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பலமுறை கால அவகாசம் பெறப்பட்டது. அதன் பின்னர் சென்ற மாதம் மீண்டும் வருகிற ஏப்ரல் 23–ந்தேதிக்குள் ஆக்கிரமிப்பு முழுவதையும் பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியது.

முத்துப்பேட்டை ஆண்டிக்குளம் பகுதியில் ஆலடி பள்ளிவாசல் என அனைவராலும் அழைக்கப்படுகிற மதினா பள்ளிவாசல் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியினரால் புனரமைக்கப்பட்டு தினந்தோறும் அப்பகுதியினரால் தொழுகை நடத்தபட்டு வருகிறது. இங்கு தினமும் சிறுவர் சிறுமிகளுக்கு இஸ்லாமிய மார்க்க கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியில் மதினா பள்ளிவாசல் இருப்பதாக கூறி போலீசார் பாதுகாப்போடு ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்பை அகற்றும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றது. இதில் பள்ளிவாசலின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. பள்ளி கண்முன்னே இடிபடுவதை அப்பகுதியினர் வேதனையுடன் பார்வையிட்டனர். இந்த பகுதியில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
  

3 comments:

  1. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் எதையும் செய்வார்கள், இப்பள்ளி எவ்வகையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கு?. போக்குவத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் எத்தனையோ கோவில் இருக்கு அதனை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அகற்ற முடிகிறதா? சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் சாலையெய் மாற்றி விடுகிறார்கள். சேது சமுத்திர திட்டம் கிடப்பில் கிடக்க என்ன காரணம்? நம்மவர்கள் தெருமுனை பிரசாரம் பண்ணி வேற்றுமை தான் உண்டாக்கிரார்கள், யோசிப்பார்களா?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    இன்ஷா அல்லாஹ், இடித்தவர்கள் இதே இடத்தில் மீண்டும் மிகப் பெரிய இறை இல்லத்தை கட்டுவதற்கு எல்லாம் வல்ல நாயன் தவ்பீக் செய்வானாக, ஆமீன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ், இடித்தவர்கள் இதே இடத்தில் மீண்டும் மிகப் பெரிய இறை இல்லத்தை கட்டுவதற்கு எல்லாம் வல்ல நாயன் தவ்பீக் செய்வானாக, ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.