.

Pages

Wednesday, April 22, 2015

அதிரை அருகே பெண் திடீர் மாயம் !

அதிரை அடுத்து நடுவிக்காடு கிராமம் ராஜாமடம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் இவரது மகள் தேன்மொழி (வயது 26), இவர் கடந்த 13–ந் தேதி வெளியில் சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

அவரது தந்தை வடிவேல் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மகள் தேன்மொழி கிடைக்காததால் இதுகுறித்து அதிரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.