இந்நிலையில் இறுதிகட்டமாக குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கட்டயங்ககளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குளத்தை சுற்றி பசுமையை ஏற்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வாகனம் மூலம் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்டு செக்கடி குளத்தில் இறக்கி வைக்கபட்டன. இவற்றை அப்பகுதியினர் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதையடுத்து குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Wednesday, April 22, 2015
செக்கடி குளத்தில் பெங்களூர் மரக்கன்றுகள் !
இந்நிலையில் இறுதிகட்டமாக குளத்தை சுற்றி தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. கட்டயங்ககளுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குளத்தை சுற்றி பசுமையை ஏற்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வாகனம் மூலம் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்டு செக்கடி குளத்தில் இறக்கி வைக்கபட்டன. இவற்றை அப்பகுதியினர் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதையடுத்து குளத்தை சுற்றி மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் நலன் கருதி பல பேருடைய வாழ்த்துக்களுடன் - ஒரு சிலர் எதிர்த்தாலும் - துஆவுடன் இந்த காரியம் பெரும் முயற்சிக்கு பிறகு முடியும் தருவாய்க்கு வந்துள்ளது, இறுதியாக பசுமையான சூழலை உருவாக்க பெங்களூரிலிருந்து பூச்செடிகளும், இதர செடிகளும் வந்துள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டியது நம்மவர்கள் ஒருவர் மீதும் கடமை. முக்கியமாக சிறுவர்கள் இதில் கை வைப்பதோ, பூக்களை பறிப்பதோ, செடியின் கிளைகளை ஓடிப்பதோ கூடாது என்று பதாகைகள் ஆங்காங்கே வைக்க வேண்டும். மேலும் வீட்டுப்பணியாளர்கள் குப்பைகளை போட தனி இடம் அமைத்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் காலி இடத்தை பார்த்தல் அசால்ட்டாக குப்பை வீசுவது நமதூரில் சகஜமாகி வருகிறது.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ், நன்மையை நாடி செய்யும் இந்த நடை மேடையில் பயனடைவோர் அனைவரின் துஆவும், பாராட்டும், சதகத்துன் ஜாரியாவாக கிடைத்துக்கொண்டிருக்கும். நம் மக்கள் இதை பயன்படுத்துவதோடு பாதுகாக்க வேண்டியது மிக மிக முக்கியம். குறிப்பாக இளைஞர்கள் செக்கடிப்பள்ளி படிக்கட்டை துஷ்பிரயோகம் செய்ததுபோல் இதை செய்து விடாமல் கண்காணிக்க வேண்டும்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் இது செக்கடி குலக்கரைதானா, இது அதிரையில்தான் உள்ளதா? என வியக்குமளவுக்கு இந்த கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்காக செலவு செய்தவர்கள், பாடுபட்டவர்கள், ஒத்துழைத்தவரகள், ஆதரவாக இருந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எல்லா வளங்களையும் வாரி வழங்க நாம் அனைவரும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
ReplyDelete