.

Pages

Saturday, April 25, 2015

ஜி.கே வாசனுடன் M.M.S. பஷீர் அஹமது சந்திப்பு !

அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் மாநில பொதுக்குழு நேற்று [ 24-04-2015 ] சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்கள் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் தமாகா மூத்த தலைவர்கள் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன் ஆகியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். நேற்றைய சந்திப்பின் போது M.M.S குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற முத்தமிழ் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே வாசன் அவர்களை M.M.S. குடும்பத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். இன்றைய சந்திப்பின் போது தமாகா மூத்த தலைவர்கள் ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

5 comments:

  1. மர்கூம் ஹாஜி M.M.S அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பணி தொடர வாழ்த்துகின்றேன்...


    பழஞ்சூர்
    K. செல்வம்
    துபாய்

    ReplyDelete
  2. ungaludia Arasiyal pani sirakka vaalthukkal

    ReplyDelete
  3. ஒரே தலைவரை எத்தனை தடவை பார்ப்பது.

    ReplyDelete
  4. ஒரே தலைவர் என்றாலும் தமிழ்நாடே எதிர்பார்க்கும் ஒப்பற்ற தலைவர் அல்லவா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.