அதிரையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, அப்பகுதி மக்களுக்கு ஒருவகையில் போக்குவரத்துக்கு பயனளிப்பதாக இருந்தாலும், மற்றொரு வகையில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. பெரும்பாலும் இரவு நேரங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அதிரை அரசு மருத்துவமனையில் சேர்த்தால், அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இருப்பதில்லை. தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்வதற்கு, ஒரு மணி நேரம் வரை தாமதமாவதால், விபத்துக்குள்ளானவர்கள் வழியிலேயே உயிரிழக்கும் பரிதாப சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இந்த நிகழ்வுகளை தவிர்க்கும், விதமாக அதிரை அரசு மருத்துவமனையை பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இரவு நேரத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிரை டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கும் அனுப்பபட்டுள்ளது. மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு பங்களிப்பு தொகை செலுத்தவும் தயாராக உள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அரசு நடவடிக்கை எடுத்து, மக்கள் பங்களிப்புடன் அதிரை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கலாமே !
நன்றி:தினமலர்
M.L.A.அவர்களின் கடிதம் எங்கே.
ReplyDeleteAiyo vedugkappa
ReplyDelete