.

Pages

Thursday, April 16, 2015

இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த இந்திய மாணவர்கள் !

* File Photo
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன்மைப் பங்கு வகித்த முஸ்லிம்களின் ஓட்டுரிமையினை பறிக்க வேண்டும் என்று மும்பையினை தலைமை இடமாகக் கொண்ட சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் ராவத் ஒருபுறம் சொன்னாலும் மறுபுறம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'  என்ற பழமொழிக்கு இணங்க ஒரு சாதனையினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உலகமெங்கும் உள்ள பொறியியல் கல்லூரி 79 மாணவர் குழுக்கள் கலந்து கொண்டன. எதற்கு என்றால் புதுவிதமான வானூர்தி வடிவமைப்பு போட்டி சம்பந்தப்பட்டதுதான்.
அதில் மும்பை எம்.எச் சாபு சித்திக் எஞ்சினீரிங் கல்லூரி மாணவர்கள் ஆசியாக் கண்டத்திலே முதலிடம் பிடித்துள்ளனர்.

பகவத்கீதைப் போட்டியில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவியினை பாராட்ட முன் வந்த சிவ சேனாவோ, அல்லது பி.ஜே.பியோ ஆசிய கண்டத்திலேயே முதலிடம் பிடித்த மும்பை எம்.எச் சாபு சித்திக் எஞ்சினீரிங் கல்லூரி மாணவர்களை அந்த அமைப்புகள் பாராட்டினால் போற்றலாம்.

அவர்களுக்கு மனம் வராவிட்டாலும் நாம் பாராட்டலாமே !


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

2 comments:

  1. நடைமுறைக்கு சாத்திய படாத ஒன்றை இந்த கூழ் முட்டை காவி சிந்தனை எண்ணம் படைத்தவர்கள் பாரதமாதாகேஜி என்று ஆடுகிறார்கள். மற்ற நாட்டவர்,மதத்தவர்,இனத்தவர் தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் அன்றாட வாழ்க்கையோடு கலந்து விட்டது.

    ReplyDelete
  2. சிவ சேனாவின் உண்மையான எதிரிகள் தலித் மக்கள் தான். ஆனால் தலித் எதிர்ப்பை நேரடியாக மேற்கொண்டால் கொண்டு வரலாம்.இவர்கள் சாயம் வெளிப்பட்டுவிடும் என்ற காரணத்திற்காக தான் சிறுபான்மையினர் எதிர்ப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். இஸ்லாமியனரை இந்த நாட்டை விட்டு விரட்டி விட்டால் மீண்டும் தலித்துகளை ஒடுக்கிவிடலாம் என்பதே திட்டம். தலித்துகளும், சிறுபான்மையினரும் ஒன்றாக இருக்கும் வரை இவர்கள் திட்டம் நிறைவேற போவதில்லை,

    மனிதனை முதலில் மனிதனாக மதிக்க வேண்டும். இந்த நாட்டை மதம் ஆட்சி செய்கிறதா? அல்லது கொள்கை ரீதியான கட்சி ஆட்சி செய்கிறதா என்ற சந்தேகம் வருகிறது. எல்லாருக்கும் ஓட்டு உரிமையை ரத்து செய்து விட்டு மன்னராட்சி கொண்டு வரலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.