தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் அமலில் இருந்து வருவதால் விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டு படகுகள், தூண்டில் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் மீன் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே உள்ள கடலோரக்கிராமத்தில் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்ட சிகப்பு கலவாய் மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சிகப்பு நிறத்தில் காணப்படுவதால் 'தக்காளி மீன்' என்ற பெயரில் உள்ளூர் வியாபாரிகள் அழைத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் இந்த வகை மீன்களை 'ஹம்ரூ' ( இன வகையை சார்ந்தது ) என்ற பெயரில் அழைப்பது உண்டு.
கிலோ ₹ 300 வரை விற்பனையானது. மீன் வியாபாரிகள் மொத்தமாக இவற்றை வாங்கிச்சென்றனர். மீன் வாங்கிச் செல்ல வந்த வாடிக்கையாளர்கள் சிகப்பு கலவாய் மீன்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த மீனை யாராவது சமைத்து சாப்பிட்ட அனுபவம் உண்டா?.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.