இந்த சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும்,( 1 ம் நம்பர் ) தொடக்கப்பள்ளியும் ( 2 ம் நம்பர் ) உள்ளது. இந்த பள்ளிகளில் சுமார் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் நிகழும் விபத்துகளை தவிர்க்க வாகன வேகத்தடுப்பு அமைக்க அதிரை நகர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசின் நெடுஞ்சாலைதுறை சார்பில் 1 ம் நம்பர், 2 ம் நம்பர் பள்ளி அருகிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் சேர்மன் வாடி பகுதி ஆகிய இரண்டு இடங்களில் வாகன வேகத்தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், தக்வா பள்ளி டிரஸ்டி உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபூப் போல வேகத்தடை, அழகான வேகத்தடை, தாலாட்டும் வேகத்தடை, தந்தி அடிக்காத வேகத்தடை, இருமல் வராத வேகத்தடை, புளிச்ச ஏப்பம் வராத வேகத்தடை.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.