.

Pages

Sunday, April 19, 2015

அரசின் இ-சேவை மையங்களில் இருப்பிட, வருமான, சாதிச்சான்று பெற அழைப்பு !

அரசு இசேவை மையங்களில் இருப்பிட, வருமான, சாதிச்சான்று உள்ளிட்ட சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

2015-16 ம் கல்வி ஆண்டில் உயர் கல்வி பயில செல்லும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான இருப்பிட சான்று, வருமானச் சான்று, சாதிச்சான்று, முதல் பட்டதாரிச் சான்று உட்பட அனைத்து சான்றுகளையும் பெற அரசு பொது இசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் என்று மாவட்டத்தில் 239 இசேவை மையங்கள் இயங்கி வருகிறது. தக்க அசல் சான்றுகளுடன் விண்ணப்பங்களை பதிவு செய்து அந்தந்த மையங்களிலேயே சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம். கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பித்து தேவையான சான்றுகளை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.