அதிரையை சேர்ந்த இளைஞர் ராஜிக் ( வயது 32 ). இவர் நேற்று நள்ளிரவு பட்டுக்கோட்டை கரிக்காடு அருகே 15 பேர்கள் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.
தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், கடத்தி சென்ற ராஜிக்கை மீட்டு தரக்கோரியும் தமுமுக சார்பில் இன்று மாலை பட்டுக்கோட்டை காவல் நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்த போவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட இளைஞரை ஒரத்தநாடு தாலுகா டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நேற்று இரவு நடந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமுமுக மாவட்ட பொருளாளர் அஹமது ஹாஜாவை தமுமுக மாவட்ட நிர்வாகிகள், அதிரை, மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிளை நிர்வாகிகள், அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள், உமர் தம்பி மரைக்கா மற்றும் ஊர் பிரமுகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்க காவல்துறையை கேட்டுக்கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.