.

Pages

Saturday, April 18, 2015

அதிரை சுற்றுவட்டார ஊராட்சி பகுதிகளில் மனை வாங்கும் முன் கவனம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !

அதிரை சுற்றுவட்டார ஊராட்சி பகுதி உட்பட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் வீட்டு மனைப்பிரிவு வாங்கும்போது அவை நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் வீட்டு மனைப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் விதி மீறி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த மனைப்பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் மனைப்பிரிவுகள் வாங்கும் போது, கீழ்கண்ட விதி பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

மனைப்பிரிவின் அளவு எவ்வளவாக இருந்தாலும் ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான அங்கீகாரம் மட்டும் போதாது. நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஊராட்சித்தலைவரால் மனைப்பிரிவு அனுமதி வழங்கும் உத்தரவிலும், வரைபடத்திலும், நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதி ஆணை எண் விவரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மனைப்பிரிவுகளில் உள்ள சாலைகள், பூங்கா, பள்ளி மற்றும் இதர பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் திறந்தவெளி காலியிடங்கள், மனைப்பிரிவு உரிமையாளரிடம் இருந்து சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவரின் பெயருக்கு தானப்பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நன்செய் நிலங்களில் மனைப்பிரிவு அமைத்திட கண்டிப்பாக ஆட்சியரின் அனுமதி தேவை.

மனைப்பிரிவுக்குட்பட்ட இடத்தில் நீர்நிலைகள், வாய்க்கால் இருந்தால், அவை தொடர்ந்து அதே பயன்பாட்டுக்கு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாய்க்கால்களைத் தூர்த்து மனைப்பிரிவுக்கு வழங்கப்பட்ட அனுமதி சட்ட விதிகளுக்கு உட்பட்டு ரத்து செய்யப்படும். நகர் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல், கிராம ஊராட்சித் தலைவரின் ஒப்புதல் மட்டும் பெற்றிருந்தால், அது விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவாக கருதப்படும். அப்படிப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட மாட்டாது. எனவே கிராமப்பகுதியில் மனைகள் வாங்கும் பொதுமக்கள், அந்த மனைப்பிரிவு நகர் ஊரமைப்புத்துறையின் முன் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும், அதன் அனுமதி எண் விவரங்களையும் சரிபார்த்த பின்னர் பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட மனைப்பிரிவுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் முன் அனுமதி கிடைத்துள்ளதா அல்லது முன் அனுமதி பெறாமல் ஊராட்சித் தலைவரின் தன்னிச்சையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ராஜப்பா நகர் 4-ஆம் தெருவில் அமைந்துள்ள நகர் ஊரமைப்புத்துறையின் துணை இயக்குநரை, 04362-273575 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.