.

Pages

Tuesday, April 21, 2015

செக்கடி பள்ளி சுவர் விளம்பரம் அழிப்பு !

தமிழகத்தின் அரசியல் காட்சிகளில் ஒன்றாக திகழ்கிறது நாம் தமிழர் கட்சி. இதன் தலைவராக சீமான் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கட்சியின் மாநாடு எதிர்வரும் [ 24-05-2015 ] அன்று திருச்சியில் மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வாரீர் என அழைப்பு விடுத்து அதிரை செக்கடி பள்ளி அருகே உள்ள சுவற்றில் இதற்கான அறிவிப்பு எழுதப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் அரசியல் விளம்பரம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் சுவர் விளம்பரம் இன்று காலை அழிக்கப்பட்டது.

1 comment:

  1. பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுக்கள். இது போன்ற வணக்க ஸ்தலங்களுக்கு சொந்தமான இடங்களில் இப்படி அனுமதி இன்றி அதுவும் அரசியல் விளம்பரம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். அதிரை நியூஸ் உடனடியாக தெரிவித்ததால், பிற்காலங்களில் இப்படிப்பட்ட இடங்களில் மற்ற அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதை தடுக்க ஒரு முன்னுதாரனமாகியுள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.