.

Pages

Tuesday, April 28, 2015

அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவை வேண்டி நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க முடிவு !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் எதிர்வரும் [ 30-04-2015 ] அன்று நடைபெற இருக்கும் சாலை மறியல் போராட்டம் அறிவிப்பை அடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் தலைமையில் நாளை [ 29-04-2015 ] காலை 10 மணியளவில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று மாலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். இதில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்ட முடிவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியார் அலுவலகத்தில் நாளை காலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள் அரசு அலுவலர்களுடன் விவாதிப்பது எனவும், கூட்டத்தில் அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை காலை சரியாக 9 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிரை பள்ளிவாசல்களிலும் இது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது.
 
 

6 comments:

  1. இந்த விசயத்தியாவுது ஊர் மக்கள் ஒன்றுனைந்து வெற்றி வாகை சூடி வருவோம்.,(இன்ஷா அல்லாஹ்)

    ReplyDelete
  2. இந்த விசயத்தியாவுது ஊர் மக்கள் ஒன்றுனைந்து வெற்றி வாகை சூடி வருவோம்.,(இன்ஷா அல்லாஹ்)

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    விடா முயற்சி வெற்றியைத்தரும் என்பார்கள், அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள், கேட்க்காத கடன் வராது என்பார்கள், நெருங்காத உறவு விலகிப் போகும் என்பார்கள்.

    அதுபோல நமது சேர்மன் தம்பி அஸ்லம் அவர்கள் விடாது எடுத்த இந்த முயற்ச்சி வெற்றியத் தரும்.

    இனிமேலாவது அதிரை மக்கள் அரசு மருத்துவமனையை மதிக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  4. அரசு மருத்துவமனையை முறையாக நாம் பயன்படுத்தாமல் எல்லாவற்றிற்கும் தனியார் மருத்துவமனைகயை நாடுவதால் அரசு இதில் சரியாக கவனம் செலுத்தாமல் உள்ளது. இத்தகைய போராட்டத்தின் மூலியமாக நமது தேவையையும் அவசியத்தையும் அரசின் கவனத்திற்க்கு எடுத்து செல்லவேண்டும்

    ReplyDelete
  5. நமது கோரிக்கையான '24 மணிநேர மருத்துவமனை' என்பதற்கு பதிலாக 'சுகாதார சீர்கேடு' என பொருளை மாற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் கோட்டாட்சியர் என்பதால் மிகுந்த கவனத்துடன் கலந்து கொள்ளவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.