.

Pages

Sunday, April 19, 2015

TNTJ நடத்திய இரத்த தான முகாம் !

பேராவூரணி உதயம் விழா அரங்கில் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி கிளை இணைந்து இரத்த தான முகாமினை நடத்தினர்.
       
கிளைத்தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சம்பை சாதிக் பாட்ஷா, மாவட்ட துணைத்தலைவர் சேக்தாவூத், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
 
மருத்துவ கல்லூரி மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் கொடையாளிகளிடம் இருந்து குருதியை பெற்று சேமித்தனர். நிர்வாகிகள் நசீர், சாதிக் அலி, அலி முகமது, பர்வேஸ், சேக்மைதீன், சமீர் அகமது, சாகுல்ஹமீது, ரியாஸ் அகமது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
   
முகாமில்  மொத்தம் 56 பேர் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர்.

பேராவூரணியிலிருந்து நமது நிருபர்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.