தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை, சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, அதிராம்பட்டினம் பேரூராட்சி சிஎம்பி லேன் பகுதி விகேஎம் ஸ்டோர் அருகே குழி தோண்டி குழாய்கள் புதைக்கும் பணி நடந்தது. 15 நாட்கள் ஆனநிலையில் இதுவரை தோண்டிய குழியை மூடவில்லை. சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வரும் இப்பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இவ்வழியே பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், டூவீலர் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளத்தைச் சுற்றி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் தோண்டிய குழியை உடனே மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பத்தப்பட்ட வார்டு உறுப்பினரோ அல்லது பொதுநல விரும்பியோ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.மற்றும் இதுபோல் அலட்சியமாக நடந்து கொள்ளும்ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
ReplyDelete