அபுதாபி : அபுதாபி விளையாட்டு கழகத்தின் ஆதரவுடன் அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய கபடி போட்டியில் பங்குகொண்ட வீரர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கள் மாலை புட்லான்ட் உணவகத்தின் அரங்கத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக யு ஏ இ எக்ஸ்சேஞ்ச் தலைவர் திரு சுதிர்குமார் ஷெட்டியும், ஏர்இந்தியாவின் அபுதாபி மேலாளர் டாக்டர் நவீன்குமார் அவர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.
யு ஏ இ எக்ஸ்சேஞ்ச் தலைவர் திரு சுதிர்குமார் ஷெட்டி அவர்கள் தனது உரையில் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான கபடி போட்டி நடத்துவதில் பங்கு கொண்டு வருவதற்காக மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே நட்புறவு அதிகரிக்கும் என்றார். தொடர்ந்து இந்த போட்டிகள் நடத்த தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.
ஏர்இந்தியாவின் அபுதாபி மேலாளர் டாக்டர் நவீன்குமார் அவர்கள் ஏர் இந்தியா விமான சேவை தாயகத்துக்கு செல்வதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது. கபடி போட்டிக்கான ஆதரவினை இந்த நிறுவனம் தொடர்ந்து அளிக்கும் என்றார்.
கடந்த 11 ஆண்டுகளாய் தமிழ்ச்சங்கம் நடத்திவரும் இந்த நல்லசேவையில் இணந்து நடுவராய் பங்களித்து வரும் சகோதரர் பாபுசாஜனுக்கு சிறப்பு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது . தலைவர் ரெஜினால்ட் , செயலாளர் ராஜு, பொருளாளர் சந்திரன், இளைஞரணி கருணாநிதி முதலிய நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபி அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது, காயல் அன்சாரி, லெப்பை தம்பி, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், வர்த்தக பிரமுகர்கள் ஹமீத், மஜீத், சல்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.