.

Pages

Sunday, September 18, 2016

இஜாபா பள்ளி அருகே புதிதாக தார் சாலை அமைக்கும் பணி !

அதிராம்பட்டினம், செப். 18
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட
சிஎம்பி லேன் இஜாபா பள்ளிவாசல் அருகே புதிதாக போடப்பட்டு வரும் தார் சாலை பணியினை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு சிஎம்பி லேன் இஜாபா பள்ளிவாசல் அருகே அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி மூலம் 20 மீட்டர் நீளத்தில், 4 மீட்டர் அகலத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் பணிகளை அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் முகம்மது இப்ராகிம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்னும் ஓரிரு வாரங்களில் இதன் பணிகள் நிறைவு பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த தொழுகையாளிகள், பள்ளி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.