அதிரை நியூஸ்: நவ.28
அமீரக, அபுதாபி விமான நிலையத்தில் 4 நாட்கள் தங்கும் டிரான்ஸிட் விசா 30 நிமிடங்களில் கிடைக்கும்
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3 பகுதியில் புதிதாக ஒரு விசா கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே 'விசா ஆன் அரைவல்' கவுன்டர் ஒன்றும் ஏற்கனவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கவுன்டரில் அபுதாபி வழியாக டிரான்ஸிட்டில் செல்லும் பயணிகள் அல்லது அபுதாபிக்கு உள்ளே வரும் பயணிகளின் விசா விண்ணப்பங்களை பரிசீலித்து சுமார் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் விசா வழங்கப்படும்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் கவுன்டரில் அனைத்து நாட்டு டிரான்ஸிட் பயணிகளுக்கு 4 நாட்களுக்கு அதாவது 96 மணிநேரத்திற்கு அபுதாபி உள்ளே பிரவேசிக்க விசா வழங்கப்படும். முன்பு குறிப்பிட்ட சில நாடுகளின் பயணிகளுக்கு மட்டுமே விமான நிலையத்தில் டிரான்ஸிட் விசா வழங்கப்பட்டது. மேலும் 96 மணிநேர டிரான்ஸிட் விசாவில் அபுதாபிக்கு வருபவர்கள் மீண்டும் அதே விசாவை சுற்றுலா விசாவாக மாற்றிக் கொண்டும் அதிகநாட்கள் தங்க அனுமதிக்கப்படுவர்.
இந்த புதிய 96 மணிநேர விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையொட்டி எதிஹாத் விமான நிறுவனமும் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. எதிஹாத் விமானம் மூலம் பயணிக்கும் அனைத்து வகுப்பு டிரான்ஸிட் பயணிகளும் தேர்வு செய்யப்பட்ட 60 அபுதாபி ஹோட்டல்களில் 2 இரவுகளுக்கு முன்பதிவு செய்தால் 2 வது இரவு தங்குவதற்கு இலவசம் என அறிவித்துள்ளது.
பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு ஓர் இரவும், முதல் வகுப்பு பயணிகளுக்கு 2 இரவுகளும் ஹோட்டல் தங்கல் இலவசம். ஏர்பஸ் 380 ரக விமானத்தில் ரெஸிடென்ஸ் கேபின் ஆன்போர்டு வகுப்பில் பயணம் செய்யும் டிரான்ஸிட் பயணிகளுக்கு 'எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில்' 2 இரவுகள் தங்கிச் செல்ல இலவசமாக அனுமதிக்கப்படுவர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.