.

Pages

Monday, November 27, 2017

ஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் அகற்றம் !

அதிரை நியூஸ்: நவ.27
இந்தியா, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவருடைய வயிற்றிலிருந்து 5 கிலோ இரும்பு பொருட்கள் அகற்றம்

மத்திய பிரதேச மாநிலம், சட்னா மாவட்டம் சொஹாவால் என்ற ஊரைச் சேர்ந்தவர் 32 வயதுடைய முஹமது மக்சூது. வயிற்று வலியால் துடித்த இவரை பரிசோதித்த மருத்துவர் குழு இவருடைய வயிற்றிலிருந்து சுமார் 5 கிலோ எடையுடைய இரும்பு மற்றும் இதர உலோக, கண்ணாடி பொருட்களை அகற்றியுள்ளனர்.

1 செயின், 263 காசுகள், 12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள் மற்றும் சில கண்ணாடித் துண்டுகளை சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் டாக்டர் பிரியங்க் ஷர்மா தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவர் குழு ஆபரேசன் செய்து அகற்றியுள்ளனர். மந்த சிந்தனையுடைய முஹமது மக்சூது யாருக்கும் தெரியாமல் இவற்றை விழுங்கி வந்துள்ளார்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் முஹமது மக்சூது தற்போது அபாய கட்டத்தை தாண்டி உடல்நிலை தேறி வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனையையும் முழுங்கியவருக்கு மரணம் வந்திருக்க வேண்டும் ஆனால் இறைவன் நாடாமல் மரணம் நெருங்காது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாக திகழ்கிறது.

Source: NDTV
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.