.

Pages

Saturday, November 18, 2017

அஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப்பு!

அதிரை நியூஸ்: நவ.18
அமீரகத்தின் 46வது தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளதாலும், நடப்பு வருடம் வழங்கி மகிழும் ஆண்டாக (Year of Giving) கடைபிடிக்கப்பட்டு வருவதை சிறப்பிக்குமுகமாகவும் அஜ்மானில் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து குற்றங்களின் மீதான அபராதங்களில் 50 சதவிகிதம் தள்ளுபடியை அஜ்மானின் பட்டத்து இளவரசரும், அஜ்மான் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் அம்மார் பின் ஹூமைத் அல் நுஐமி அறிவித்துள்ளார்.

நடப்பு வருடம் நவம்பர் 11 ஆம் தேதி வரை நிகழ்த்தப்பட்ட போக்குவரத்து குற்றங்களின் மீதான அபராதங்களுக்கு எதிர்வரும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இச்சிறப்பு சலுகையை பயன்படுத்தி நிலுவை அபராதங்களை செலுத்தலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி சலுகை அபராதங்களை அஜ்மான் போலீஸ் அல்லது உள்துறை அமைச்சகத்தின் அப்ளிகேஷன்களை (app) பயன்படுத்தி மட்டுமே செலுத்த முடியும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.