சில பல ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊரச்சேர்ந்த ஒருத்தரு வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை விற்பனை செய்து வந்தாருங்க. ஒருமுறை புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளுக்கு பாக்கி வசூலுக்கு சொந்த வாகனத்துல போனவரு... தான் கொண்டு வந்த வாகனத்தையே மணமேல்குடியில மறந்துட்டு பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்த கதையை இன்னும் எங்க செட்டு மறக்காம அப்பப்ப பேசி சிரிப்போம் என்ற 'மறதி' தகவலுடன் ஜெர்மனிக்கு போயிருவோம் வாங்க!
ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் 20 வருடங்களுக்கு முன்பு அதாவது 1997 ஆம் ஆண்டு தற்போது 76 வயதை எட்டிவிட்ட ஒருவர் தனது கார் திருடு போய்விட்டதாக போலீஸில் புகார் தருகிறார். போலீஸார் வலைவீசி தேடியும் கிடைக்கவேயில்லை. இந்நிலையில் பழமையான ஒரு வீட்டை இடிப்பதற்காக அதிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போது 'திருட்டுப் போனதாக' சொல்லப்பட்ட காரை போலீஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
உண்மையில் கார் திருடு போகவில்லை நம்ம காரு ஓனரு தான் இந்த வீட்டு கராஜ்ல பார்க்கிங் பண்ணிட்டு 20 வருசமா பார்க் பண்ணிய இடத்தையே மறந்து போயிருந்திருக்கிறார். ஒருவழியாக போலீஸார் காரை கண்டுபிடித்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஓனரிடம் ஒப்படைத்தாலும் அந்த ஓட்ட உடைசல் காரை இனி ஓட்டக்கூடாது, அது ஸ்க்ராப் (கழிவு பொருள்), உடைத்து நொறுக்கு என உத்தரவிட்டுள்ளது. பாவம் ஓனரு... 20 வருசம் கழித்து கூட தன்னுடைய காருடன் இணைய முடியவில்லை.
அதேபோல், ஜெர்மனியில் நடைபெற்ற இன்னொரு சம்பவத்தில் ஒருவருடைய 'திருடு போனதாக' புகார் சொல்லப்பட்ட வாகனத்தை 2 வருடங்கள் கழித்து மீட்டுக் கொடுத்துள்ளனர். அதாவது குடிகார பேர்வழி தான் பார்க் பண்ணியதாக சொன்ன இடத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், உண்மை காரணம் போதையால் ஏற்பட்ட மறதி. அந்த வாகனத்தை மீட்கும் போது அந்த ஆளோட ஷூவுக்கள் 40,000 யூரோக்களும், காருக்குள் சுமார் 50,000 யூரோக்கள் மதிப்புள்ள உபகரணங்களும் அப்படியே இருந்துள்ளன.
இந்த வருட ஆரம்பத்தில் ஸ்காட்லாந்தில் ஒருவர் 5 நாட்கள் தனது வாகனத்தை தேடிவிட்டு திருடு போய்விட்டதாக புகார் தெரிவித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் என்றாலும் அவருடைய வாகனம் சுமார் 6 மாதங்கள் கழித்து நிறுத்திவிட்டு மறந்த இடத்திலிருந்து மீண்டும் கிடைத்துள்ளது என்றாலும் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. 6 மாதம் பார்க்கிங் கட்டணம் செலுத்தாத குற்றத்திற்காக அவர் 5,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் செலுத்த நேரிட்டது.
Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
who is the person in adirai ?
ReplyDelete