அமீரக ஷார்ஜாவில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுடன் இணைந்த பெண் குழந்தைகள்
ஷார்ஜாவைச் சேர்ந்த இமராத்தி ஒருவர் வெளிநாட்டு பெண் ஒருவரை மணந்திருந்தார், காலப்போக்கில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய நேரிட்டது என்றாலும் அவருடைய 2 சிறு பெண் குழந்தைகளையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் அந்தப்பெண்.
தந்தை தனது குழந்தைகளை பார்க்க விரும்பும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி முட்டுக்கட்டை போட்டு வந்ததால் கடந்த 14 ஆண்டுகளாக தனது குழந்தைகளை காணாமல் இருந்துள்ளார்.
பெண் குழந்தைகளுடன் சென்ற அந்தப்பெண் சுமார் 2 வருடங்களுக்கு முன் தனது 2 பெண் குழந்தைகளையும் பக்கத்து வீட்டு இமராத்தி குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு சொல்லாமல் கொல்லாமல் முகவரியும் தராமல் தனது நாட்டிற்கு சென்றுவிட்டார், அத்துடன் அவர் தொடர்பு அறுந்தது.
2 குழந்தைகளை வளர்த்த பக்கத்துவீட்டு இமராத்தி குடும்பம் ஷார்ஜா அரசின் குடும்பநல ஆதரவு மையத்திற்கு தெரிவித்ததை தொடர்ந்து 14 வருடங்களுக்குப் பின் 2 பெண் குழந்தைகளும் தனது தந்தையுடன் இணைந்தனர். தற்போது அக்குழந்தைகளின் வயது முறையே 15 மற்றும் 17 ஆகும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.