.

Pages

Tuesday, November 28, 2017

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள் விடுதலை!

அதிரை நியூஸ்: நவ.28
46வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி 46வது அமீரக தேசிய தினம் கொண்டாடப்படுதை முன்னிட்டு துபை மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் சுமார் 1200 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அமீரக ஜனாதிபதியும் அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் அபுதாபி சிறைகளிலிருந்து 645 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்..

அதேபோல், அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபை எமிரேட்டின் ஆட்சியாளருமாக ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் துபை சிறைகளிலிருந்து 606 கைதிகள் விடுதலையாக உள்ளனர்.

மேலும், ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவூது பின் சகர் அல் கஸிமி அவர்களும் 246 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் மொத்தமாக அமீரகத்தில் 1497 கைதிகள் விடுதலையாகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.