அதிராம்பட்டினம், நவ.24:
தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் அறிவிக்கக் கோரிக்கை:
அதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் நவ. 29ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று அறிவிக்க வேண்டுமென இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அதிரை புகாரி கூறியது:
கடந்த 1981 ஆம் ஆண்டு அதிரையில் நடந்த மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவில் பங்கேற்ற அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் பேசுகையில், விரைவில் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தாலுகா அலுவலகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதியை இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதுகுறித்து மேலும் சில சமூக ஆர்வலர்கள் கூறியது:
மாணிக்க.முத்துசாமி:
பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக பட்டுக்கோட்டை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து, அந்த 2 வட்டங்களும் பட்டுக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கச் செய்வது என்று அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, தற்போது அத்திட்டம் அரசு பரிசீலனையில் உள்ளது. இதில், பட்டுக்கோட்டை கிழக்கு வட்டத்துக்கு மக்கள் தொகை அதிகமுள்ள அதிராம்பட்டினத்தை தலைமை இடமாக அறிவிக்க வேண்டும்.
அதிரை மைதீன்:
அதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒரு காலத்தில் அதிரை மிகப்பெரும் வாணிபப் பகுதியாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் இருந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள், மீனவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்காக பட்டுக்கோட்டையிலுள்ள தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. எனவே, அதிரை பகுதி மக்கள் நலன் கருதி, அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தாலுகா அலுவலகம் அமைப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக, தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
கே.எம்.ஏ. ஜமால் முகமது:
அதிரை பகுதி மக்கள் பட்டா, பல்வேறு சான்றிதழ், நலத்திட்ட உதவிகள் பெற சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. மேலும், இந்த பணிகளுக்காக ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டி உள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நியாமான கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கெண்டு, தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
சார்லஸ்:
அதிராம்பட்டினம் அதன் சுற்றுப் புற பகுதிகளில் அதிக கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரும் பரப்பளவை கொண்டுள்ள இப்பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்தால், அதிராம்பட்டினம், அருகிலுள்ள மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்காவயல், கூடலிவயல், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மழவேனிற்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, மிலாரிக்காடு, புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிகவும் பயன் பெறுவர் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.