.

Pages

Wednesday, November 22, 2017

டின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்து துபை மாநகராட்சி எச்சரிக்கை

அதிரை நியூஸ்: நவ.22
டின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்து துபை மாநகராட்சி எச்சரிக்கை

வளைகுடா நாடுகளில் டின்களில் பதப்படுத்தப்பட்ட பல்வேறு உணவுகள் (canned foods) விற்பனையாவதும், காலத்தின் சூழல் கருதி அதை பயன்படுத்துவோரும் ஏராளமானோர் உள்ளனர். இந்த டின் உணவுகளை குறித்து துபை மாநகராட்சியின் ஒரு அங்கமாக செயல்படும் துபை மத்திய ஆய்வகத்தின் (Dubai Central Lab) 4 நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் துபையில் நடைபெற்ற 11வது சர்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கிலும் சமர்ப்பிக்கப்பட்டன.

மேற்காணும் ஆய்வின்படி, டின்கள் (தகரம்) சிறுகச்சிறுக கரைந்து டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களுடன் ஒன்றோடு ஒன்றாக ஐக்கியமாகி விடுகிறதாம். இதனை உட்கொள்வோருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் இதர குடல், இரப்பை நோய்களும் வருகிறதாம். மேலும் தோல் எரிச்சல், ஈரல், கல்லீரல், சுற்றோட்ட நரம்பு திசுக்கள் ஆகியவை பழுதடைந்து நாள்பட நீடிக்கும் பலவகையான தொந்தரவுகளை தருகிறதாம்.

துபை முழுவதிலிழுமிருந்து சுமார் 250 மாதிரிகள் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லரை கடைகளிலிருந்து ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. குறிப்பாக அன்னாசி, அவரை, பல்வேறு காய்கறிகள், காளான், தக்காளி, பழச்சாறுகள், கலவையான பழங்கள், மாட்டிறைச்சி, டுனா மீன்கறி, மத்தி மீன் மற்றும் ஆலிவ் போன்றவை சோதனை செய்யப்பட்டதில் மாட்டிறைச்சி, டுனா மீன்கறி, மத்தி மீன் மற்றும் ஆலிவ் அடைக்கப்பட்ட டின்கள் மட்டும் கரையாமல் இருந்தன. அதேவேளை பழச்சாறுகள், பழக்கலவைகள், காளான், தக்காளி மற்றும் அன்னாசியுடன் டின் கரைந்து கலந்திருந்தது உறுதியானது.

ஓவ்வொரு டின் குவளையிலும் 200ppm (parts per million) என்ற அளவே அனுமதிக்கப்பட்டது. இதுவே அமிலத்தன்மையுடைய காய்கறிகளான (acidic content vegetables)  தக்காளி மற்றும் பழங்களில் ppm கூடுதலாக காணப்படும். இந்த கூடுதல் குறைவு அளவுகளை சிலரது உடல்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில் பலருக்கு ஒவ்வாமையையும் ஏற்படுத்தும் என்றாலும் தற்போதைய நிலையில் அவற்றை சாப்பிட தடை ஏதுமில்லை.

புதப்படுத்தப்பட்ட டின் குவளை உணவுகளை திறந்தவுடன் அதிலுள்ளவற்றை உடனடியாக ஒரு கண்ணாடி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். மேலும் திறக்கப்பட்ட டின்னை பகுதியளவு பயன்படுத்திய பின் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளோ அல்லது வெளியையோ வைக்க வேண்டாம். மேலும் அந்த டின் குவளையை கொண்டு நீர் அருந்த வேண்டாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் வரும் தண்ணீரையும் பயன்படுத்தாதீர் அதில் தான் டின் கரைந்து கலந்திருக்கும்.

நிபுணர்களின் அறிவுறுத்தலுக்குப் பின், கடைகளில் வைக்கப்படும் டின்களின் அனுமதிக்கப்பட்ட கால அளவை குறைக்கவும், டின் உணவு தயாரிப்பாளர்கள் டின்னின் அடிப்பாக தரத்தை உயர்த்தவும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என துபை மநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.