.

Pages

Tuesday, November 28, 2017

துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிராம்-பஸ் இயக்கும் நேரங்கள் அறிவிப்பு (முழு விவரம்)

அதிரை நியூஸ்: நவ.28
துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் மற்றும் பொது போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு

துபையில் அமீரக தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதால் அரசுத்துறை நிர்வாகங்களுக்கு நவ.30 முதல் டிச.3 ஆம் தேதிவரையிலான 4 நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது அறிந்ததே. இந்த 4 நாட்களும் துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமைபோல் கட்டணம் உண்டு.

4 நாட்களும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள் திறக்கப்படாது.

துபை மெட்ரோ:
வியாழன், நவம்பர் 30:
ரெட் லைன், அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
கிரீன் லைன், அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

வெள்ளி, டிசம்பர் 1:
ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டும் காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை

சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
ரெட் லைன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
கிரீன் லைன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

துபை டிராம்:
வியாழன், நவம்பர் 30:
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
வெள்ளி, டிசம்பர் 1:
காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை
சனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:
அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

துபை பஸ்:
கோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.29 வரை
குபைபா (பர்துபை) பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.10 வரை
சத்வா பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 முதல் இரவு 11.35 வரை
தடம் எண் C01: 24 மணிநேரமும் சேவை வழமைபோல் நீடிக்கும்
அல் கிஸஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை
அல் கோஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை
ஜெபல் அலி பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை

மேலும் விபரங்களுக்கு: 
RTA website https://www.rta.ae/wps/portal/rta/ae/about-rta/news-and-media/all-news/NewsDetails/service+timing+during+prophet+birthday+commemoration+day+and+national+day+holiday+2017

Sources: Gulf News & The National
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.