.

Pages

Thursday, November 23, 2017

குவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவர்

அதிரை நியூஸ்: நவ.23
குவைத்தில் 2 முறை போக்குவரத்து சட்டத்தை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 2 முறை சீட் பெல்ட் அணியாமல் அல்லது மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டி பிடிபட்டால் வெளிநாட்டவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என பொது உறவுகள் மற்றும் ஊடகப் பாதுகாப்புகளுக்கான தலைவர் பிரிகேடியர் ஆதில் அல் ஹஷ்ஷாஷ் தெரிவித்துள்ளார்.

குவைத்தியர் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் போக்குவரத்து சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை இதுபோன்ற சிறு தண்டனைக்குரிய தவறுகளுக்கு நாடு கடத்தல் என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தண்டனை என சட்ட நிபுணர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். இதுபோல் வெளிநாட்டவர்களை நாடு கடத்தினால் பின்விளைவாக வெளிநாட்டிலுள்ள குவைத்தியர்களும் குறிப்பாக மாணவர்கள் இத்தகைய சட்டங்களை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மேலும், சீட் பெல்ட் அணியாதது, மொபைல் போனில் பேசுவது, சாலையில் கண்ட இடங்களிலும் வாகனத்தை நிறுத்துவது மற்றும் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் பார்க்கிங் செய்வது போன்ற குற்றங்களுக்காக மாதக் கணக்கில் வாகனங்களை பிடித்து வைப்பதற்கும் குவைத்தியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் இத்தகைய சட்டங்களை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழும்பத் துவங்கியுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.