துபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் மின்சக்தி கார்கள் வாடகைக்கு கிடைக்கும்.
Renault Zoe All ரக வாடகை கார்கள் தினமும் 24 மணிநேரம் அல்லது தினசரி 250 கிலோ மீட்டர் என்ற பில்லிங் அடிப்படையிலும், வார, மாத பில்லிங் அடிப்படையிலும் வாடகைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார்களை துபை மின்சார வாரிய மையங்களில் (DEWA) அமைக்கப்பட்டுள்ள 90 மின் சார்ஜர்களில் இலவசமாக சார்ஜ் செய்து கொள்ளலாம், இலவச பார்க்கிங் (Green Parking) மற்றும் சாலிக் டேக் (Salik Tag) போன்றவற்றிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருப்பதற்காக இந்நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் அதற்காக நன்றியையும் DEWA விற்கு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் துபை மின்சாரம் (DEWA) அறிவித்திருந்தபடி, 2019 ஆம் ஆண்டு வரை கிரீன் பார்க்கிங் என்று அடையாளமிடப்பட்டுள்ள பார்க்கிங்களில் இந்த மின் சக்தி கார்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். மேலும் இலவச ரெஜிஸ்ட்ரேசன் (Free Registration), இலவச புதுப்பித்தல் (Free Renewal), இலவச சாலிக் டேக் (Free Salik Tag) மற்றும் மின்சக்தி கார்கள் என அடையாளப்படுத்தும் இலவச நம்பர் பிளேட் ஸ்டிக்கர்கள் ஆகியவை சலுகைகளாக தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.