.

Pages

Saturday, November 18, 2017

அமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காணவில்லை !

அதிரை நியூஸ்: நவ.18
அமீரகம், புஜைரா அருகே உள்ள கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர் 5 பேர் மீட்பு ஒருவரை காணவில்லை.

புஜைரா அருகேயுள்ள கொர்பக்கான் (Khor Fakkan) அமீரகத்தின் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று. இங்கு அழகிய கடற்கரை, அமீரகத்தின் பழமையாக மஸ்ஜித், அருவி (தற்போது மூடப்பட்டுள்ளது), மலைப்பள்ளத்தாக்குகள், நீர்த்தேக்கம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டது.

கடந்த வியாழன் மாலையில் இங்குள்ள மலைப்பள்ளத்தாக்குகளுக்கு சுற்றுலா சென்ற 6 இந்திய மாணவர்கள் சுமார் 4.30 மணியளவில் பெய்த திடீர் மழை வெள்ளத்தில் தங்கள் வாகனத்துடன் சிக்கிக் கொண்டனர். இதை அருகாமையிலிருந்து கவனித்த இமராத்தி (Emirati) ஒருவர் தனது பணியாட்களுடன் உதவிக்கு விரைந்தார்.

இமராத்தியின் உதவியால் தண்ணீரில் குதித்த 5 மாணவர்கள் (வயது 22 முதல் 23 வரை) மீட்கப்பட 1 மாணவர் (வயது 19) மட்டும் தனது தந்தையின் காரை விட்டுவிட்டு வர பயந்ததால் வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்டார். போலீஸிற்கு தகவல் சொல்லப்பட காணமல் போன அந்த மாணவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.