அதிராம்பட்டினம், பிப்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 64-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவில், கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் தலைமை ஏற்று இந்திய தேசியக் கொடி ஏற்றினார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் ஒலிம்பியன் சைமன் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்து முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.