23-02-2019 மற்றும் 24-02-2019 ஆகிய தினங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது குறித்து பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, 31-01-2019 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்ட, நீக்கம் செய்யப்பட வேண்டிய மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் 01-02-2019 முதல் தொடர்ந்து அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறியவர்களுக்கு வரும் 23-02-2019 மற்றும் 24-02-2019 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம் தினத்தன்று அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் தேவையான தேர்தல் படிவங்களுடன் (படிவம் எண் 6,7,8,8ஏ ஆகியன) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணியில் இருப்பார்கள்,
தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் 01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடைய உள்ளவர்கள் அதாவது 31-12-2000 வரை பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று படிவம் 6ஐ பெற்று வயது மற்றும் முகவரிக்கான ஆவண ஆதாரங்களை இணைத்தும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள கதவு எண்னை பூர்த்தி செய்து வாக்கு சாவடிநிலை அலுவலர்களிடமே அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8ம் ஒரே சட்ட மன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8எ ஆகியவற்றை தொடர்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்கலாம்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் நகல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பொது மக்கள் அதனைப் பார்வையிட்டு, தங்கள் பெயர் பிழையேதுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான விபர’;களை அறிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ல் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், வாக்காளர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசியில் Voters Helpline என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டு அதன் மூலமாகவும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள விபரத்தினை தொpந்துகொள்ளலாம், மேற்படி செயலி மு்லமாகவும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
23-02-2019 மற்றும் 24-02-2019 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களின் மாற்றுத்திறனின் விபரத்தினை தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தெரிவித்து வாக்காளர் பட்டியில் அவர்களின் மாற்றுத்திறன் விவரத்தினை குறித்துக் கொள்ளவும் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் படிவம் 6 மூலமும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.