.

Pages

Thursday, February 21, 2019

SSLC, +1, +2 அரசு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு  அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு பொது தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (21.02.2019)நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது : -
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 29 தேர்வு மையங்களில் 3,878 மாணவர்களும், 3,724 மாணவிகளும், கூடுதல் 7,602 மாணவ மாணவியர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 5,519 மாணவர்களும், 5,839 மாணவிகளும், கூடுதல் 11,358 மாணவ மாணவியர்களும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 40 தேர்வு மையங்களில் 4,919 மாணவர்களும், 4,830 மாணவிகளும், கூடுதல் 9,749 மாணவ மாணவியர்களும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 2,352 மாணவர்களும், 2,416 மாணவிகளும், கூடுதல் 7,602 மாணவ மாணவியர்களும் ஆக கூடுதல் 16,668 மாணவர்களும், 16,809 மாணவியர்களும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 33,477 மாணவ மாணவியர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 3,180 மாணவர்களும், 3,690 மாணவிகளும், கூடுதல் 6,870 மாணவ மாணவியர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களில் 4,003 மாணவர்களும், 5,199 மாணவிகளும், கூடுதல் 9,202 மாணவ மாணவியர்களும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 3,567 மாணவர்களும், 4,474 மாணவிகளும், கூடுதல் 8,041 மாணவ மாணவியர்களும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 1,660 மாணவர்களும், 2,173 மாணவிகளும், கூடுதல் 3,833 மாணவ மாணவியர்களும் ஆக கூடுதல் 12,410 மாணவர்களும், 15,536 மாணவியர்களும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 27,946 மாணவ மாணவியர்கள்  ப்ளஸ் 1 வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 3,401 மாணவர்களும், 3,998 மாணவிகளும், கூடுதல் 7,399 மாணவ மாணவியர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களில் 4,284 மாணவர்களும், 5,420 மாணவிகளும், கூடுதல் 9,704 மாணவ மாணவியர்களும், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 3,734 மாணவர்களும், 4,846 மாணவிகளும், கூடுதல் 8,580 மாணவ மாணவியர்களும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 1,711 மாணவர்களும், 2,162 மாணவிகளும், கூடுதல் 3,873 மாணவ மாணவியர்களும் ஆக கூடுதல் 13,130 மாணவர்களும், 16,426 மாணவியர்களும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆக கூடுதல் 29,556 மாணவ மாணவியர்கள்  ப்ளஸ் 2 வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ளனர்.

இத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1600க்கு மேற்பட்ட பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 224 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கண்காணிப்பாளர்கள்  மற்றும் மாணவர்கள்  கைபேசி கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கஜா புயல் பாதித்த பகுதி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அதிக தேர்ச்சி அடைய முதன்மை கல்வி அலுவலர் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தா, கல்வித்துறை அலுவலர்கள்  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.