அதிராம்பட்டினம், பிப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 21-வது ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் என்.உதயகுமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு ஆண்டு விழா உரை நிகழ்த்தினார். இதில் கல்வியின் அவசியம் மற்றும் அதன் பயன் குறித்தும், மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் பற்றி விளக்கிப் பேசினார்.
அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் இராம. குணசேகரன், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள் எஸ்.பி கணபதி, எம்.எஸ் சந்திரசேகரன், மாளியக்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.பி இரமேஷ், ஆர். தனபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்
பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பள்ளி சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளைப் பட்டியலிட்டு பேசினார்.
விழாவில் கல்வியில், விளையாட்டில் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிகளை ஆர். தனபால் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.