தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையத்தை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 28.72 கோடியில் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
மாவட்ட ஆட்சியரகத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையம், காமராஜர் சந்தை, சரபோஜி சந்தை ஆகியவை புதுப்பிப்பது தொடர்பாக வியாபாரிகளுடன் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
பொலிவுறு நகரத் திட்டத்துக்காக தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு திட்டமாகப் பழைய பேருந்து நிலையமும், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையமும் முழுமையாக இடிக்கப்படவுள்ளன. இதில், பழைய பேருந்து நிலையத்தை ரூ. 14.88 கோடி மதிப்பிலும், திருவையாறு வழித்தடப் பேருந்து நிலையத்தை ரூ. 13.85 கோடியிலும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், காமராஜர் சந்தை ரூ. 17.47 கோடியிலும், சரபோஜி சந்தை ரூ. 14.59 கோடியிலும் இடித்து புதுப்பிக்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர்.
பின்னர், இந்த இடங்களில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, வியாபாரிகள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யுமாறு மாநகராட்சி ஆணையரிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் (பொ) ப. காளிமுத்து, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் ராஜாகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.