தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக இதுவரை 521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 16.11.2018 அன்று அதிகாலை வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கஜா புயலால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1,70,00,000 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் முழுவதும் சேதமடைந்த 17,614 குடிசை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.17,61,40,000 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 54,668 குடிசை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.22,41,38,800 நிவாரண உதவித்தொகையும், பகுதியளவு சேதமடைந்த 68,891 ஓட்டு வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.35,82,33,200 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 1,49,766 குடும்பங்களுக்கு ரூ.74,88,30,000 வாழ்வாதார உதவித்தொகையும், கஜா புயலால் உயிரிழந்த பசு, காளை, எருது, கன்று, ஆடு, கோழி மற்றும் இதர பறவையினம் உள்ளிட்ட 2,25,188 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,61,88,405 நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் தென்னை மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்ட 49,285 தென்னை விவசாயிகளுக்கு ரூ.354,56,05,800 இழப்பீட்டு நிவாரண உதவித்தொகையும், கஜா புயலால் நெல் மற்றும் இதர வேளாண்மை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 1956 விவசாயிகளுக்கு ரூ.2,38,58,373 நிவாரண உதவித்தொகையும், வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்ட 5,923 விவசாயிகளுக்கு ரூ.4,11,58,753 நிவாரண உதவித் தொகையும், கஜா புயலால் சேதமடைந்த நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,10,15,500 நிவாரண உதவித்தொகையும், விசை படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,60,00,000 நிவாரண உதவித்தொகை என தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக இதுவரை 521 கோடியே 81 இலட்சத்து 68 ஆயிரத்து 831 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.