.

Pages

Wednesday, February 13, 2019

அதிரை பகுதியில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்: சிறு, குறு விவசாயிகள் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

அதிராம்பட்டினம், பிப்.13
மத்திய அரசு அறிவித்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடப்பு ஆண்டிலேயே இத்திட்டம் தொடங்கப்படுவதால், பயனாளிகள் விவரம் சேகரிப்பு பணி ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஏரிப்புறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி கூறியது:
நஞ்சை நிலமாக இருப்பின் 2.5 ஏக்கர், புஞ்சை நிலமாக இருப்பின் 5 ஏக்கருக்கு மிகாமல் இருப்பவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்தகைய சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அவர்களது நிலத்துக்கான சிட்டா நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியன இணைக்கப்பட்ட விண்ணப்பம் பெறப்படுகிறது.

ஏரிப்புறக்கரை வருவாய் கிராமப் பகுதிக்கு உட்பட்ட ஆகிய பகுதிகளின் சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என்றார்.

குறிப்பு: கணக்கெடுக்கும் பணி இன்று புதன்கிழமை காலை முதல் ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நாளை (14-02-2019) வியாழக்கிழமை மாலை 5 மணி வரை தொடரும்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
9080775227 (அதிரை மைதீன்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.